
சென்னை,
ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பறந்து போ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மதன் கார்க்கி கூறியதாவது:
இயக்குநர் ராமுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். நிறைய விஷயங்களை ராம் உடைத்தார். முத்துக்குமார் உயிருடன் இருந்து இருந்தால் நான் கண்டிப்பாக இந்த படத்திற்கு பாடல் எழுதியிருக்க மாட்டேன். ஏனென்றால் அவர்களின் நட்பு அவ்வளவு ஆழமான நட்பு. எனவே, இந்த வெற்றியில் அவருக்கும் பங்கு இருக்கிறது. அவரையும் நான் நினைவு கூர்ந்து கொள்கிறேன். இந்த படத்தில், முன்பு துண்டு துண்டாக பார்த்தேன். இப்போது அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது சிறப்பாக உள்ளது" என்றார்.
முன்னதாக நடிகர் சிவா பேசும் போது, " வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி. ராம் சாரின் அனைத்து உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. அவரின் உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார்" என்றார்.