
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சையாரா'. இப்படத்தின் டீசர் வெளியான பிறகு 2025ம் ஆண்டின் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கும் படமாக மாறியுள்ளது. காலத்தால் அழியாத காதல் படங்களை உருவாக்குவதில் பெயர் பெற்ற யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மோஹித் சூரி கூட்டணி சையாரா திரைப்படம் மூலமாக அறிமுக நடிகர்களை வைத்து ஒரு அழகான காதல் கதையை உருவாக்குவதற்காக பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இன்று இப்படத்திலிருந்து 'சையாரா' என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர். மேலும், மோஹித் சூரி, இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் இருப்பதாக கூறியுள்ளார். 'சையாரா' திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு பாலிவுட் திரையுலகில் புதுமுக நடிகர்களுடன் உருவாகியுள்ள படம் . யஷ் ராஜ் பிலிம்ஸ் இன்று சையாராவின் டிரெய்லரை வெளியிட்டனர். தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் மோஹித் சூரி கூறுகையில், "ஒரு கட்டத்தில், நடிப்புத் திறனுடைய புதுமுகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், புதுமுகங்களுடன் சையாராவை உருவாக்கும் எண்ணத்தை கைவிட்டிருந்தேன். ஆனால், அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டாவின் திறமையான நடிப்பால் எனது எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தது. அஹான் பாண்டே மற்றும் அனீத் பட்டா போன்ற திறமையான நடிகர்களைக் கண்டுபிடிக்காவிட்டால் நான் சையாரா படத்தை உருவாக்கியிருக்க முடியாது. இளம் காதல் கதையை உருவாக்குவதற்காக யஷ் ராஜ் நிறுவனத்தில் அஹான் மற்றும் அனீத்தை தயார் செய்து கொண்டிருந்தபோது, அவர்களை வைத்து வேறு ஏதாவது ஒரு படத்தை உருவாக்குவது பற்றி யோசித்தேன்.
புதுமுகங்களுடன் ஒரு காதல் கதையை உருவாக்கும்போது, அவர்கள் உணர்ச்சிகரமான நடிப்பு நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும், இதனால் காதல் கதை மக்களுக்கு உண்மைக்கு நெருக்கமாக தோன்றும். புதுமுகங்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அவர்கள் திரையில் தங்களைத் தாங்கி நிற்கக்கூடிய நடிகர்களாக இருக்க வேண்டும்" என்றார்.