ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கோனாசிகா - உ.பி.ருத்ராஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.
இதில் முதல் பாதியில் உ.பி.ருத்ராஸ் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க முயற்சி தோல்வியில் முடிந்தது. முழு நேர ஆட்ட முடிவில் உ.பி.ருத்ராஸ் 1-0 என்ற கோல் கணக்கில் கோனாசிகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. உ.பி.ருத்ராஸ் தரப்பில் ஹர்திக் சிங் வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.