தமிழ்நாட்டின் நிதி நிலை கட்டுக்குள்தான் உள்ளது - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

2 hours ago 2

விருதுநகர்,

விருதுநகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது,

தமிழ்நாட்டின் நிதி நிலைமை திவாலாக போவதாக, எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறான தகவலை தெரிவித்துள்ளார். பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தவறான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அடிப்படை புரிதலின்றி எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.

உள்நாட்டு உற்பத்தி அளவை பொறுத்தே, கடன் வாங்கும் அளவு, திருப்பி செலுத்தும் திறன் முடிவு செய்யப்படுகிறது . நிதிக்குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கியுள்ளது . 2021-22 நிதியாண்டில் 28.7% அளவுக்கு கடன் வாங்கலாம் என நிதிக்குழு பரிந்துரை செய்த நிலையில், 27.01% அளவுக்கே கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நிதிநிலைமை கட்டுக்குள் உள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; 4 தென் மாநிலங்களுக்கும் சேர்த்தே ரூ.27,000 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது . அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட நிதிச் சுமையையும் நாங்கள்தான் சரி செய்கிறோம். என தெரிவித்தார்.

Read Entire Article