அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் - மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்

8 hours ago 1

பெங்களூரு,

3-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் வதோதராவில் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொண்டு ஆடியது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெங்களூரு தரப்பில் எலீஸ் பெர்ரி 81 ரன்கள் எடுத்தார். மும்பை தரப்பில் அமஞ்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 168 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஜார்ஜியா வரேஹம் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் மும்பை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட விரும்பினோம். ரசிகர்கள் ஒரு பெரிய பங்கை வகிக்கப் போகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். எனவே, நாங்கள் ஒன்றாக இருக்க விரும்பினோம். மேலும், இங்கு பனியின் தாக்கும் இருக்கும் என்பதால் டாஸை வென்று நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தோம்.

அணியில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிவார்கள். மேலும், போட்டிகளைப் பொறுத்து எப்போது பந்து வீசப் போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இப்போட்டியின் 18-வது ஓவரின் போது அமஞ்ஜோத் கவுரிடம் இது தான் அவர்களின் முக்கிய பந்துவீச்சாளரின் கடைசி ஓவர். அதன்பின் அதன் பிறகு அனுபவம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் யாரும் இல்லை. அதனால் நீ களத்தில் இருந்து பொறுமையாக விளையாடு என்று கூறினேன்.

அவர் ஒரு நல்ல வீராங்கனை என்பது எனக்கு தெரியும். ஆனால், இதுபோன்ற அழுத்தமான சூழலை அவர் இதுவரை எதிர்கொண்டது கிடையாது. ஆனாலும், அவர் திறமையாக செயல்பட்டு எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article