அறந்தாங்கி பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்

3 months ago 17

 

அறந்தாங்கி,அக்.15: அறந்தாங்கி, அழியாநிலை, கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகுதிகளான அறந்தாங்கி, ராஜேந்திரபுரம், கீரமங்கலம், மறமடக்கி, ஆவணத்தான்கோட்டை, மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, செரியலூர், பனங்குளம், பெரியாளூர், குளமங்கலம், தொழுவன்காடு, திருநாளூர், சுனையக்காடு, பரவாக்கோட்டை, ஆளப்பிறந்தான், கம்மங்காடு, துரையரசபுரம் உள்பட பகுதியில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (16ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

The post அறந்தாங்கி பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article