அறந்தாங்கி பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

3 weeks ago 6

அறந்தாங்கி,டிச.24: அறந்தாங்கியில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கி பகுதியில் உள்ள டீ, ஹோட்டல் கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஏற்கனவே அறிவுறுத்தி பிளாஸ்டிக் பயன்படுத்தும் கடைகளிலும், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தும், பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அறந்தாங்கியில் தற்போது பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் காணப்படுகிறது. அறந்தாங்கி பகுதியில் உள்ள அனைத்து டீ கடைகளில் பார்சல் டீ, பிளாஸ்டிக் பைகளில் கட்டி வழங்கப்படுகிறது. ஒரு தடவை மட்டும் பயன்படுத்தும் கப்புகள் அதிக அளவில் காணப்படுகிறது. அதே மாதிரி ஹோட்டல்களில் உணவு பொருள்களும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து வழங்கப்படுகிறது. இதனால் அறந்தாங்கியில் பகுதியில் அதிக அளவில் பிளாஸ்டிக் சாலைகளிலும் கிடக்கிறது. இப்படி பிளாஸ்டிக் மூலம் வழங்கப்படும் பொருள்களை எடுத்துவிட்டு பிளாஸ்டிக் பைகளை விட்டு விட்டு செல்கின்றனர்.

இதனால் சாலைகளின் ஓரத்தில் பிளாஸ்டிக் பைகள் தேங்கி கிடக்கிறது. சாலைகளில் ஓரத்தில் கிடப்பதால் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் நின்றுவிடுகிறது. சில சமயம் பிளாஸ்டிக்கை தீ வைத்து எரிக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் அதிக பயன்பாட்டால் அறந்தாங்கி பகுதியில் மாசு படிந்து வருகிறது. எனவே அறந்தாங்கி பகுதியில் மறைமுகமாக விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் தடுக்க வேண்டும். இதே போல் அறந்தாங்கி ஒன்றிய ஊராட்சி உட்பட்ட கடைகளிலும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து பிளாடிஸ்டிக் பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி பகுதியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article