அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்வொர்க் செயல்படாததால் பொதுமக்கள் அவதி: நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

3 weeks ago 5

அறந்தாங்கி: அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்வொர்க் செயல்படாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அறந்தாங்கி நகர் பகுதியில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட செல்போன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் நாள்தோறும் அனைத்து நெட்வோர் செல்போன் சிம்கார்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு அறந்தாங்கி நகர் பகுதியில் மட்டும் குறைந்தது 30 சிம்கார்டு விற்பனை செய்யப்படுகிறது. இப்படி நாளுக்கு நாள் சிம்காடு விற்பனை அதிகரித்து கொண்டே செல்கிறது. உபயோகிப்பார்கள் ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று சிம்காடுகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நெட்வொர்க் செயல்பட டவர் அந்த அந்த நிறுவனங்கள் முதல் முதலில் அமைத்த பிறகு டவர் கூடுதலாக அமைக்கவில்லை.

இதனால் அறந்தாங்கி நகர் பகுதியில் நாள்தோறும் நெட்வோர்க் செயல்படாமல் இருக்கிறது. நெட்வோர்க் எடுத்தால் டேட்டா செயல்படாமல் உள்ளது. இதனால் அவசர காலத்தில் திடீர் என நெட்வொர்க் செயல்படவில்லை என்றால் பொதுமக்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும். விபத்தில் சிக்கியவர்களை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கூட சம்பவ இடத்திற்கு வரவழைக்க முடியாத அளவிற்க்கு நெட்வொர்க் செயல் படாமல் இருந்து வருகிறது. இதனால் அறந்தாங்கி நகர் பகுதியில் நெட்வோர்க்கு பிரச்சனை இல்லாத அளவிற்கு அந்த நெட்வோர்க்கு நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அறந்தாங்கி பகுதியில் செல்போன் நெட்வொர்க் செயல்படாததால் பொதுமக்கள் அவதி: நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article