பெங்களூரு: அர்காவதி லேஅவுட்டில் வீட்டுமனை ஒதுக்கப்பட்ட சிவலிங்கப்பா, வெங்கடகிருஷ்ணப்பா, ராமச்சந்திரய்யா, ராஜசேகர் ஆகியோர் நேற்று ஆளுநரிடம் கொடுத்த புகார் மனுவில், தானிசந்திரா, சம்பிகேஹள்ளி, ஜக்குரு கே. நாராயணபுரா, மற்றும் 16 கிராமங்கள் உட்பட சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அர்காவதி லே அவுட் அமைக்கும் திட்டத்தை பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழுமம் (BDA) மூலம் கட்டப்பட்டது.
கடந்த 2004ம் ஆண்டில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வீட்டுமனை கேட்டு பிடிஏக்கு விண்ணப்பித்தனர். இதில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 12 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்து, பதிவும் செய்யப்பட்டது. கடந்த 2006 ம் ஆண்டில், பிடிஏ மூலம் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு மனைகள் ஒதுக்கப்பட்டன. இதில் 1,200 சதுர அடி நிலத்திற்கு ரூ.2.5 லட்சமும், 2,400 சதுர அடி மனைக்கு ரூ.4.5 லட்சம் பெறப்பட்டது.
பதிவுச் சான்றிதழ் மற்றும் கொள்முதல் பத்திரம் பெற்ற நில உரிமையாளர்கள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை சொத்து விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு அர்காவதி லேஅவுட்டில் ஒதுக்கீடு செய்த வீட்டுமனையை முதல்வர் சித்தராமையா அரசு திரும்பப் பெற்றது. கடந்த 2006 முதல் நில வரி செலுத்தி உள்ளோம். கடந்த 2014 முதல் தற்போது வரை ஒதுக்கீட்டாக பதிவு செய்யப்பட்ட நிலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மேலும், உரிமையாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலமும் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் அர்காவதியில் கெம்பேகவுடா லேஅவுட்டில் பார்ப்போம் என அதிகாரிகள் அலட்சியமாக பதில் கூறுகின்றனர். அர்காவதி லேஅவுட் சட்டவிரோதமானது என கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்ட நிலம் நில அபகரிப்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், உரிய பயனாளிகளாக உள்ள ஒதுக்கீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்வர் சித்தராமையா மற்றும் பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
The post அர்காவதி லே அவுட்டில் வீட்டுமனை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு: முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் புகார் appeared first on Dinakaran.