அரூர் சந்தையில் பூண்டு விலை சரிவு

4 hours ago 2

அரூர், மார்ச் 4: அரூர் வாரச்சந்தையில் பூண்டு, பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் விலை குறைந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹80வரை விற்பனையான சின்ன வெங்காயம், தற்போது விலை குறைந்து, கிலோ ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயமும் 2 கிலோ ₹100க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 3 கிலோ வெங்காயம் ₹100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ₹160க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு, தற்போது கிலோ ₹80க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

The post அரூர் சந்தையில் பூண்டு விலை சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article