
சண்டிகார்,
அரியானா மாநிலம் குருஷேத்ராவில் இருந்து டெல்லிக்கு நேற்று ஒரு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கர்னல் மாவட்டம் நிலோகேரி ரெயில் நிலையத்தில் நின்றுவிட்டு, புறப்பட்ட 100 மீட்டர் தொலைவிலேயே எதிர்பாராதவிதமாக தடம்புரண்டது. 4-வது பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு விலகி இறங்கியதால் விபத்து ஏற்பட்டது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.
இதனால் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இருந்தபோதிலும் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிலைமை விரைவில் சீரடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.