அரியானா அமைச்சரின் வங்கி கணக்கில் பண மோசடி முயற்சி

1 month ago 11

சிம்லா: அரியானா மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர் விக்ரமாதித்ய சிங். இவர் கணக்கு வைத்துள்ள பொதுத்துறை வங்கியின் விதான் சபா கிளையின் தலைமை மேலாளர் பிரியா சாப்ராவுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் தலைமை செயலக அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் அமைச்சர் வங்கி கணக்கின் இருப்பு குறித்து விசாரித்த அவர் ரூ.7.85 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் முறையில் ஆன்லைன் பரிமாற்றம் செய்யுமாறு கேட்டுள்ளார். இதற்காக சில கணக்கு அடையாளங்களை மேலாளர் கேட்ட போது போனில் பேசிய நபருக்கு தெரியவில்லை. அதனால் அழைப்பை துண்டித்துள்ளார். இது குறித்து வங்கி மேலாளர் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post அரியானா அமைச்சரின் வங்கி கணக்கில் பண மோசடி முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article