அரியலூர் மே 10: அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்களுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரியலூர் மாவட்டத்தில் மே 13ம் தேதியன்று இலுப்பையூர் ஊராட்சிக்குட்பட்ட பொய்யாதநல்லூர், பொட்டவெளி ஊராட்சிக்குட்பட்ட வெள்ளூர், ஒட்டக்கோவில் ஊராட்சிக்குட்பட்ட ஒட்டக்கோவில், வாலாஜாநகரம் ஊராட்சிக்குட்பட்ட தெம்மணம் மற்றும் கருப்பிலாகட்டளை ஊராட்சிக்குட்பட்ட கல்லக்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம்கள், நிர்வாக காரணங்களால் வரும் மே 24ம் தேதியன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அரியலூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் தேதி மாற்றம் appeared first on Dinakaran.