அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை

3 months ago 15

 

அரியலூர், அக்.15: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் வாட்ஸ்அப் எண்.9384056231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்த புகார்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான புகார் பதிவேடு மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து புகார்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்திட, ஏதுவாக சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டது.

பேரிடர் தொடர்பான புகார்களுக்கு தொடர்பு கொள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 -228709, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அரியலூர்- 04329-222058, உடையார்பாளையம்-04331-245352, வட்டாட்சியர் அலுவலகங்கள், அரியலூர்- 04329-222062, ஜெயங்கொண்டம்-04331-250220, செந்துறை-04329-242320 மற்றும் ஆண்டிமடம்- 04331-299800; ஆகிய தொலைபேசி எண்களுக்கும், வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல், புகார் தெரிவித்திடவும் பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் வுN-யுடநசவ என்கிற கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து வடகிழக்கு பருவமழை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளவும் தகவல் ,புகார் தெரிவித்திடவும் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

The post அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை appeared first on Dinakaran.

Read Entire Article