அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ்

4 hours ago 2

புதுடெல்லி,

70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நேற்று முன் தினம் தேர்தல் நடந்தது. அங்கு நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதற்கு ஆம் ஆத்மி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

ஓட்டு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பாஜக தலைவர்கள் தில்லுமுல்லுவை தொடங்கிவிட்டனர். எங்கள் கட்சி வேட்பாளர்களை தொடர்பு கொண்டுபேரம் பேசி வருகிறார்கள். இன்று காலை வரை 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 கோடி தருவதாக ஆசை காட்டி உள்ளனர். ஆனால் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் யாரும் அதனை ஏற்கவில்லை என கெஜ்ரிவால் கூறினார். இதற்கு பாஜக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தவறான தகவல் வெளியிடுவதால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று பாஜக தெரிவித்தது.

இந்தநிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயன்றதாக குற்றம்சாட்டிய விவகாரத்தில் டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த புகார் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. 16 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க ரூ.15 கோடி வழங்க இருப்பதாக கெஜ்ரிவால் பேசி இருந்தார்.

Read Entire Article