சட்டவிரோத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 4 பேர் பலி

2 hours ago 1

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் நதியா மாவட்டம் ரதலா பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோத பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் 5 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு ஆலை நிலைகுலைந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பட்டாசு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும்பணியில் இறங்கினர். ஆனால், இந்த வெடிவிபத்தில் 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  

Read Entire Article