அரவக்குறிச்சி. அக். 17: அரவக்குறிச்சியில் மழையால் முருங்கை காய் விலை வரத்து குறைந்ததுடன் விலையும் சரிந்தது.அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20க்கு விலை போனது, ஆனால் தற்போது கிலோ ரூ 80க்கு விலை போகிறது. சில்லறையில் ஒரு காய் 5. விற்பனையாகிறது. அரவக்குறிச்சி பகுதியில் ஈசநத்தம், ஆலமரத்துப்பட்டி, சாந்தப்பாடி, கோவிலூர், நாகம் பள்ளி, வெஞ்சமாங்கூடலூர் உள்ளிட்ட 20 ஊராட்சிகளில் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிடப்படுகிறது. இப்பகுதி முருங்கை காய்திரட்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.
மற்ற மாநிலங்களிலும் விரும்பி வாங்கப்படும். தற்போது மொத்த கொள்முதல் இடங்களுக்கு முருங்கைகாய் வரத்து குறைந்துள்ளது. நேற்று முருங்கை சந்தையில் கிலோ ரூ 80 மொத்த வியாபாரிகளிடம் விலை போனது.
சென்ற மாதத்தில் கிலோ ரூ 30 முதல் ரூ 40 வரை விலை போனது. முருங்கை விவசாயத்தில் ஜனவரி – மார்ச் ஒரு சீசனாகவும், ஜூலை – செப்டம்பர் 2 வது சீசனாகவும் முருங்கை அறுவடையாகும். தற்போது தொடர் மழையின காரணமாக முருங்கை காய் மரத்திலேயே வெம்பி பழுத்து போய் விற்பனைக்கு தரமற்றதாக உள்ளது. இதனால் விவசாயிகள் விற்பனை குறைவாகவே சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இதனால் வரத்து குறைவின் காரணமாக நேற்றைய சந்தையில் கிலோ ரூ 80க்கு மட்டுமே விலைபோனது.
The post அரவக்குறிச்சியில் முருங்கைகாய் விலை சரிவு appeared first on Dinakaran.