"அரண்மனை 5 " படத்தின் பணியில் இயக்குனர் சுந்தர். சி?

3 months ago 22

சென்னை,

இயக்குனர் சுந்தர் சி தமிழ் மற்றும் தெலுங்கில் 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அவர் குடும்ப படமான 'முறை மாமன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 'அரண்மனை 4' படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களும் சுந்தர்.சியிடம் கதைகள் கேட்டு வருகிறார்கள். தற்போது சுந்தர் சி 'கேங்கர்ஸ்' என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் வடிவேலு, கத்ரீன் தெரசா, பக்ஸ், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நயன்தாரா நடிக்கவுள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தினை இயக்கவுள்ளார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது.

அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. முதல் மூன்று பாகங்களுக்குக் கிடைத்ததைவிட அதிக வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்ததால், அடுத்ததாக இதன் 5 ஆம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர். சி இருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் துவங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தை அடுத்தாண்டு கோடை வெளியீடாகக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது  தற்போது அரண்மனை 5 படத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

Read Entire Article