சேலம்: ஆத்தூர் அருகே மல்லியகரையில் உள்ள அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதே பள்ளியின் 3 மாணவர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தை மறைத்ததாக கூறி பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்பு சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
The post அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.