அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

1 week ago 3

புதுடெல்லி,

அரசு வேலைக்கான ஆள்சேர்ப்பு தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பி.எஸ்.நரசிம்ஹா, பங்கஜ் மிதல் மற்றும் மனோஷ் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியிடத்துக்கான ஆள்சேர்ப்பு முறை அதற்கான விளம்பரங்கள் வெளியிடுவதில் தொடங்கி காலி பணியிடங்களை நிரப்புவதில் நிறைவடைகிறது. ஏற்கனவே இருக்கும் விதிகள் அனுமதிக்காத வரை ஆள்சேர்ப்பு தகுதிகளுக்கான விதிகளை பாதியில் மாற்ற முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை விதிகள் அவ்வாறு செய்வதற்கு அனுமதி அளித்தாலும், அது தன்னிச்சையானதாக இருக்கக்கூடாது. அது பிரிவு 14 மற்றும் பிரிவு 16 ஆகியவைகளின் விதிகளுடன் இணைக்கமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆள்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், நடுநிலையில் விதிகளை மாற்றுவதால் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர் வியப்படைய மாட்டார் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளது.

Read Entire Article