அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்துள்ளன - முதல்-அமைச்சர் பேட்டி

3 months ago 23

சென்னை,

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். ரேஸ் கோர்ஸ் நிலம் அரசின் வசம் வந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் குளம் அமைக்கும் பணியை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது ,

கடந்த 3 மாதங்களாக அரசு மேற்கொண்ட மழை நீர் வடிகால் பணிகள் தற்போது கைகொடுத்துள்ளன. மக்களிடம் கேட்டுப் பார்த்தால் அவர்கள் சொல்வார்கள்; சென்னை மற்றும் புறநகர் மக்களுக்கு நிரந்தர தீர்வு நிச்சயம் கிடைக்கும். என தெரிவித்தார்

Read Entire Article