அரசு பள்ளி அலுவலர்களுக்கான பணி நேரம் மாற்றம் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

2 hours ago 1

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களான உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்களுக்கான பணி நேரம், காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை இருந்தது. இந்த சூழலில், கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் அமைச்சு பணியாளர்களுக்கான பணி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்றி அமைத்து உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையில், பல்வேறு சங்கங்கள் அமைச்சு பணியாளர்களின் பணி நேர மாற்றம் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களின் பணி நேரம் மீண்டும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாற்றம் செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதேபோல, பணிநேரத்திற்கு பிறகு, வழக்கமான பணிகள் இல்லாமல், முக்கிய மற்றும் அவசர பணிகள் இருக்கும்போது மட்டும் கூடுதல் நேரங்களில் பணிகளை மேற்கொள்ளவும், விடுமுறை நாட்களில், முறைப்பணிக்கு வரிசையாக பட்டியலிட்டு அதன்படி பணியாளர்களை அலுவலகம் வரும்படி அலுவலக தலைவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article