சென்னை: பல்கலைகழக ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. 2016ம் ஆண்டு ஜன.1ம் தேதி முதல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு பணப் பயன்களுடன் வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் உள்ள 165 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றி வரும் சுமார் 7000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் நிதி நிலை சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி பணி மேம்பாட்டுப் பணப்பயன்களை வழங்க மறுப்பதற்கு உயர் கல்வித்துறைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பேசிய சங்கத்தின் பொதுச் செயலர் முனைவர் சரவணன் கூறுகையில், ‘‘பிப்ரவரி 12, 11 ஆகிய நாட்களில் கறுப்புப்பட்டை அணிந்து கல்லூரிக்குச் செல்வது, பிப்ரவரி 19ல் சென்னையில் கல்லூரிக்கல்வி இயக்ககம் முன்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என செயற்குழு முடிவு செய்துள்ளது’’ என கூறினார்.
The post அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் 19ல் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.