அய்யன்கொல்லியில் பயனற்று கிடக்கும் பள்ளி கட்டிடங்கள்

3 months ago 17

பந்தலூர்: பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் பாதுகாப்பு இல்லாமல் பயனின்றி கிடக்கும் பள்ளி கட்டிடம் குறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விரைந்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஒரு சில பள்ளி கட்டிடங்கள் முற்புதர்கள் சூழ்ந்து பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருந்து வருகிறது.

எதனால் பள்ளிக்கட்டிடங்கள் அவ்வாறு உள்ளது? போதிய மாணவர்கள் இல்லாததால் பள்ளிக்கட்டிடங்கள் பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது பள்ளிக்கட்டிடங்கள் பழுதாகி மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு தகுதியில்லாமல் உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பள்ளிக்கல்வித்துறை இது போன்று பராமரிப்பு இல்லாமல் பயனற்று இருந்து வரும் பள்ளி கட்டிடங்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post அய்யன்கொல்லியில் பயனற்று கிடக்கும் பள்ளி கட்டிடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article