*கலெக்டர் வழங்கினார்
திருப்பதி : திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போனை கலெக்டர் வெங்கடேஸ்வர் வழங்கினார். திருப்பதி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.13.92 லட்சம் மதிப்பிலான லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலெக்டர் வெங்கடேஸ்வர், மாவட்ட இணை கலெக்டர் சுபம் பன்சால் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த 24 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லேப்டாப், மற்றும் ஸ்மார்ட் போன்களை வழங்கினர்.
அப்போது கலெக்டர் பேசுகையில், ‘திருப்பதி மாவட்டத்தில் பன்முக திறமைகள் கொண்ட மாற்றுதிறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் 24 மாணவர்களுக்கு ரூ.13 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப், ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் சக மாணவர்களைப் போல சிறந்த முறையில் கல்வி மற்றும் விளையாட்டு துறைகளில் சாதனை படைக்க வேண்டும்.
மேலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி வளர்ச்சி அடைய வேண்டும்.
இவர்களை உற்சாகப்படுத்தி வரும் ஆசிரியர்கள் கல்வித்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தன்னுடைய பாராட்டுக்கள்’ என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி நரசிம்முலு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நல இயக்குநர் ஸ்ரீநிவாசுலு, ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post திருப்பதியில் ரூ.13.92 லட்சம் செலவில் 24 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் appeared first on Dinakaran.