சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

2 hours ago 2

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நகரி நகராட்சியை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், தங்கள் பகுதியில் இயங்கி வரும் தனியார் சாயப்பட்டறைகளை மூடக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நகரி நகராட்சி கவுன்சிலர் பிடி பாஸ்கர் கூறியதாவது: நகரி நகராட்சி பகுதியில் 16 சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இந்த பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கழிவுகள் ஏரிகள், குளம் ஆகியவற்றில் கலந்து விடுவதால் நீராதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகரி நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த சாயப்பட்டறைகளை மூட நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 24 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறோம். அதனடிப்படையில், கடந்த ஆட்சியில் 16 சாயப்பட்டறைகள் மூட அரசு உத்தரவிட்டது.

தற்போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 6 சாயப்பட்டறைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்கள் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட கலெக்டர், எங்கள் பகுதியில் ஆய்வு நடத்தி 6 சாயப்பட்டறைகளுக்கு உடனடியாக தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, கவுன்சிலர்கள் கஜேந்திரா, முனி, பாலன், தயாளன், இந்திரன், பூபால், கோபால் ரெட்டி, எல்லப்பரெட்டி உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கவுன்சிலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article