![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35684996-8-zim-cri.webp)
ஹராரே,
அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டியும், அதனை தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கான (டெஸ்ட் + ஒருநாள் + டி20) ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு கிரேக் எர்வின் கேப்டனாகவும், டி20 அணிக்கு சிக்கந்தர் ராசா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே டெஸ்ட் அணி விவரம்: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனதான் காம்ப்பெல். பென் கர்ரன், ஜாய்லார்ட் கும்பி, ட்ரெவர் குவாண்டு, டகுட்ஸ்வானேஷே கைடானோ, வின்சென்ட் மசெகேசா, நியாஷா மாயாவோ, பிளெசிங் முசரபானி, ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி, விக்டர் நியாச்சி, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.
ஜிம்பாப்வே ஒருநாள் அணி விவரம்: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனதான் காம்ப்பெல், பென் கர்ரன், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மாதேவெரே, டினோடெண்டா மபோசா, தடிவானேஷா மருமணி, வெல்லிங்டன் மசகட்சா, நியாஷா மாயவோ, பிளெசிங் முசரபானி, ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, சீன் வில்லியம்ஸ்.
ஜிம்பாப்வே டி20 அணி விவரம்: சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், ஜொனாதான் காம்ப்பெல், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மாதேவெரெ, டினோடெண்டா மபோசா, தடிவானேஷா மருமணி, வெல்லிங்டன் மசகட்சா, நியாஷா மயோவா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவானி, பிளெசிங் முசரபானி, டியான் மையர்ஸ், ரிச்சர்ட் ங்வாரா, நியூமன் நியாம்ஹுரி. .