சென்னை: டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து புதிய சட்டத்தின்படி 3 பேர் கொண்ட தேடுதல் குழுவை அரசு அமைத்தது. சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும், நீக்கும் மசோதா, உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது.
The post அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு appeared first on Dinakaran.