சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மதுராந்தகம் கு.மரகதம் குமரவேல் (அதிமுக) பேசுகையில், “மதுராந்தகம் ஒன்றியத்தில், கிணார் ஊராட்சியில், கிணார் கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. 400 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். அப்பகுதியில் புதிய கட்டிடம் அமைப்பதற்கு அரசு முன்வருமா?’’ என்றார்.
இதற்கு பதில் அளித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றபிறகு, அனைத்து நியாய விலைக் கடைகளையும் புதிய கடைகளாகவும், அதிலும் பழைய கடைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் அறிவுறுத்தியிருக்கிறார்.
25 ஆண்டுகளை கடந்த நிலையில், இன்னும் 6,000 கடைகள் தான் அந்தமாதிரி பழைய கடைகளாக இருக்கின்றன. ஆண்டுதோறும் 2,500 புதிய நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கின்ற பணிகளும் நடைபெறுகின்றன. உறுப்பினர் குறிப்பிடுவது 25 ஆண்டுகளை கடந்த நிலையில் இருந்தால் துறையின் சார்பிலும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். உறுப்பினருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கொடுத்து அந்தப் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசோடு ஒத்துழைக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
The post அமைச்சர் பெரியகருப்பன் தகவல் 2,500 நியாயவிலை கடைகள் ஆண்டுதோறும் புதுப்பிப்பு appeared first on Dinakaran.