வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற நாள் முதல் அதிபர் டிரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சீனப் பொருட்களுக்கு டிரம்ப் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வரிகளை விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, சீனா தனது சந்தையில் அனுமதிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், தற்போது அவரது கவனம் திரைப்படத்துறை மீது சென்றுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியதாவது,
அமெரிக்காவில் திரைப்படத் துறை மிக வேகமாக இறந்து கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும் ஸ்டுடியோக்களையும் அமெரிக்காவிலிருந்து விலக்கி வைக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றன. ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவில் உள்ள பல பகுதிகள் பேரழிவிற்கு உள்ளாகி வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகும், எனவே, இது ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும். இது, மற்ற எல்லாவற்றிற்கும் மேலாக, செய்தி அனுப்புதல் மற்றும் பிரச்சாரம்! எனவே, நமது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் அனைத்திற்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறைக்கும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கும் நான் அதிகாரம் அளிக்கிறேன். எங்களுக்கு மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் வேண்டும் என Truth Social தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்.
The post அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும்: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.