வாஷிங்டன்: பிரான்ஸ் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு தலைநகர் வாஷிங்டன் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள பிளேர் ஹவுஸ் விருந்தினர் மாளிகையில் பிரதமர் மோடி தங்கினார். அங்கு கடும் குளிர், மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான இந்தியர்கள் குவிந்து ‘வந்தே மாதரம், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கோஷமிட்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து தனது முதல் சந்திப்பாக, டிரம்ப் நிர்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்டை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின் தனது எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி, துளசி கப்பார்டு இந்தியா, அமெரிக்கா நட்புறவில் வலிமையான நபர் என புகழ்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகத்தின் அரசின் செயல்துறை தலைவரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வாட்ஸ், இந்திய வம்சாவளி தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதையடுத்து, இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
The post அமெரிக்காவில் பிரதமர் மோடி- டிரம்ப் அதிகாலையில் சந்திப்பு appeared first on Dinakaran.