
கலிபோர்னியா,
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியில் சிறிய விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த பயங்கர விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தனியாருக்கு சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை பயணித்தாக சொல்லப்படுகிறது.எனினும், இது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் திடீரென விழுந்துள்ளது. எனினும், தரையில் இருந்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், பவர் லைன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அங்குள்ள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், இது குறித்தும் விசாரணை நடப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.