அமெரிக்காவின் 2-ம் பெண்மணி அந்தஸ்து: உஷா வான்ஸ் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்

2 months ago 11

அமராவதி,

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம், அவரது கட்சியை சேர்ந்த ஜே.டி.வான்ஸ், துணை ஜனாதிபதியாகிறார். அவர் வருகிற ஜனவரி 20-ந்தேதி டிரம்புடன் பதவி ஏற்பார். இவருடைய மனைவி உஷா. இவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். அதுவும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். அவரது சொந்த கிராமமான வத்லுரு, மிகவும் பிரசித்தி பெற்ற கோதாவரி நகரமான தனுகு, மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான பீமாவரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

உஷாவின் தந்தை ராதாகிருஷ்ணன், சென்னை ஐ.ஐ.டி.யில் எம்.டெக் படித்தவர். தாய் லட்சுமி. உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐ.ஐ.டி.யில் இயற்பியல் துறையின் முதல் உயர் அதிகாரியாக பணியாற்றியவர். உஷா தனது குடும்பத்துடன் சில காலம் சென்னையில் வசித்து வந்தார். பின்னர் அவரது குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. அங்கு பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், யேல் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தபோது ஜே.டி.வான்சுடன் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஜே.டி.வான்சின் பல வெற்றிகளுக்கு உஷா துணையாக நின்றுள்ளார். இந்த தேர்தலிலும் அவர் உறுதுணையாக இருந்தார்.

இந்தியாவை சேர்ந்த பெண்ணான உஷா, இன்று அமெரிக்காவின் பெருமைக்குரிய 2-வது பெண்மணி என்ற அந்தஸ்தை பெறப்போகிறார். இதை இந்தியாவில் உள்ள அவரது உறவினர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதியாக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ஆந்திரா முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்சுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த வெற்றி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வான்ஸ் - உஷா வான்சை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்" என்று சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.


I would also like to extend my heartfelt congratulations to Mr. @JDVance, on becoming the US Vice President-elect. His victory marks a historic moment, as Mrs. Usha Vance, who has roots in Andhra Pradesh, will become the first woman of Telugu heritage to serve as the Second Lady…

— N Chandrababu Naidu (@ncbn) November 6, 2024


Read Entire Article