அமெரிக்கா: மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

8 hours ago 3

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கெண்டகி மாகாணம் லெக்சிங்டன் நகரில் கிறிஸ்தவ மதவழிபாட்டு தலமான தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் இன்று (அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுகிழமை) வழக்கமான பிரார்த்தனை நடைபெற்றது.

பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, தேவாலயத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read Entire Article