அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150% வரி விதிப்பு: வெள்ளை மாளிகை அதிகாரி குற்றச்சாட்டு

4 hours ago 3

நியூயார்க்: வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் பேட்டியளிக்கையில்,‘‘ கனடா பல தசாப்தங்களாக அமெரிக்காவையும் கடினமான உழைக்கும் அமெரிக்கர்களையும் பிழிந்து வருகிறது. அமெரிக்க மக்கள் மீதும் இங்குள்ள எங்கள் தொழிலாளர்கள் மீதும் கனடியர்கள் சுமத்தி வரும் வரி விகிதங்களைப் பார்த்தால், அது மிகவும் மோசமானது.

இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்தியாவில், அமெரிக்க மதுபானங்களுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து வரும் விவசாயப் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுகிறது. மேலும் அமெரிக்க வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களை உண்மையில் கவனிக்கும் ஒரு அதிபர் நமக்குக் கிடைத்துள்ளார்.அவர் கேட்பதெல்லாம் நியாயமான மற்றும் சமநிலையான வர்த்தக நடைமுறைகள் மட்டுமே’’ என்றார்.

The post அமெரிக்க மதுபானங்களுக்கு இந்தியா 150% வரி விதிப்பு: வெள்ளை மாளிகை அதிகாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Read Entire Article