அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரி விதிக்க முடிவு: இந்தியா பரிசீலனை

6 hours ago 3

புதுடெல்லி,

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதன்படி, இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதித்தார். இதனை தொடர்ந்து 90 நாட்களுக்கு இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தனது முடிவில் இருந்து பின்வாங்கினார்.

அதே நேரத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி நீடிக்கும் என்றார். சீனா மீது கூடுதலாக வரி விதிப்பை அறிவித்தார். முன்னதாக எக்கு பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதி வரியையும், அதில் அலுமினிய பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டது.

இது மிகப்பெரிய இருப்பு நுகர்வோர் சந்தையை பாதிக்கும் அபாயம் இருப்பதால் உள்நாட்டு எக்கு விலைகளில் பாதிப்பு ஏற்படும் என்று இந்திய நிறுவனங்கள் அஞ்சின. இந்தநிலையில், எக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகளுக்கு பதில் அளிக்கும் விதமாக ஏற்றுமதி செய்யப்படும் சில அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. உலக வர்த்த அமைப்பிடம் (டபிள்யூ.டி.ஓ) சில அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை இந்தியா பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article