அமெரிக்க ஆய்வாளர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

3 months ago 16

ஸ்டாக்ஹோம்: நாடுகளின் செழிப்பு குறித்த ஆராய்ச்சிக்காக அமெரிக்க ஆய்வாளர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவை சேர்ந்த பொருளாதார ஆய்வாளர்கள் டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். சில நாடுகள் செழிப்பாகவும், சில நாடுகள் பொருளாதாரத்தில் தோல்வி அடைவது குறித்தும் 3 ஆய்வாளர்களும் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

எந்த ஒரு நாட்டிலும் சட்டத்தின் மோசமான ஆட்சியை கொண்ட சமூகங்கள் மற்றும் மக்களை சுரண்டும் நிறுவனங்களால் வளர்ச்சியையோ, மாற்றத்தையோ தர முடியாது என ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வில் கூறி உள்ளனர். பொருளாதார ரீதியாக நாடுகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை குறைப்பது தற்காலத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. பொருளாதார வேறுபாடுகளை போக்க சட்டப்படியான, விதிமுறைகளுக்கு உட்பட்ட சமூக நிறுவனங்களின் முக்கியத்துவத்தை 3 ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

The post அமெரிக்க ஆய்வாளர்கள் 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article