பெரம்பலூர், பிப்.27: மகா சிவராத்திரியை முன்னிட்டு பெரம்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை திருவிழா இன்று நடைபெற உள்ளது. பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில், சுவேத நதிக்கரையில் எழுந்தருளி இருக்கும், அங்காள பரமேஸ்வரிக்கு, மகா சிவராத்திரி, மயான சூரை திருவிழா இன்று (27ஆம்தேதி) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
இதனையொட்டி நேற்று புதன்கிழமை காலை கணபதி ஹோமம், கொடியேற்றுதல், காப்பு கட்டுதல் நடைபெறுகிறது. பின்னர் பால்குடம் எடுத்தல், காளிகரகம் எடுத்தல், சக்தி அழைத்தல் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (27ஆம் தேதி) காலை 8 மணிக்கு காளிபுறப்பாடு, 11மணிக்கு வள்ளாளராஜன் கோட்டை இடித்தல், குடல் பிடுங்கி மாலை ஊர்வலம், சித்தாங்கு அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. மதியம் 1-மணி அளவில் மயான சூரை, இரத்த சோறு வழங்குதல் மற்றும் சுவாமி ஊர்வலமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
நாளை வெள்ளிக் கிழமை பாரதம் படித்தல் மற்றும் வீரபத்திரர் சுவாமி ஊர்வலமும், மார்ச் 1ஆம் தேதி பொங்கல் மாவிளக்கும், அங்காளம்மன் சுவாமி ஊர்வலமும் நடைபெற உள்ளது. 2-ம் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவுபெறுகிறது.
The post பாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான சூறை appeared first on Dinakaran.