அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு ஐகோர்ட் கண்டனம் : வாக்குமூலத்தை பகலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு

2 weeks ago 5

மும்பை : விசாரணைக்கு ஆஜராகும் நபர்களை மணிக்கணக்கில் காக்க வைக்கக் கூடாது என்று தங்களை அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட 64 வயது தொழில் அதிபர் ஒருவரின் மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தது. தூக்கம் என்பது அடிப்படை உரிமை எனக்கூறிய நீதிமன்றம், சம்மனுக்கு பிந்தைய விசாரணை நடைமுறைகளுக்கு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்களின் வாக்கு மூலத்தை பகலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அதற்கு அடுத்தநாள் மீண்டும் வரவழைத்து விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவரை சம்மன் அனுப்பி விசாரிப்பதற்கு முன் குறிப்பிட்ட நாளில் தேவையான ஆவணங்களை தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும் என்றும் மணிக்கணக்கில் காக்க வைக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தீவிரத்தை பொருத்தும் சாட்சியங்களை கலைப்பார் எனக் கருதினாலும் துணை, இணை அல்லது கூடுதல் இயக்குனர்களின் ஒப்புதலை பெற்று விசாரணையை நீட்டிக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post அமலாக்கத்துறை இரவு விசாரணைக்கு ஐகோர்ட் கண்டனம் : வாக்குமூலத்தை பகலில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article