
திருப்பூர்,
அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இது குறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
திருப்பூர் மாவட்டம்,அமராவதி ஆற்றில் உள்ள முதல் 8 பழைய ராஜவாய்க்கால்களின் (ராமகுளம்,கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப்பகுதிகளுக்கு 25-ந்தேதி (இன்று) முதல் மார்ச் 30-ந் தேதி வரை இடைவெளிவிட்டு 21 நாட்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக வினாடிக்கு 300 கனஅடி வீதம் 544.32 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்படுகிறது.
மேலும், அமராவதி புதிய பாசனப்பகுதிகளுக்கு 25-ந்தேதி முதல் மார்ச் 20-ந்தேதி வரை தகுந்த இடைவெளிவிட்டு 10 நாட்களுக்கு அமராவதி பிரதானகால்வாய் வழியாக வினாடிக்கு 440 கன அடி வீதம் 380.16 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 924.48 மில்லியன் கன அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டு உள்ளது. இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 32 ஆயிரத்து 770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.