'அமரன்' படத்திற்கு சிம்பு பாராட்டு

2 months ago 12

சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். திரையிட்ட இடங்களில் எல்லாம் அமரன் படத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் 42.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், அமரன் படத்திற்கு நடிகர் சிம்பு பாராட்டு தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

அமரன் படத்தை மனப்பூர்வமாக ரசித்தேன். நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை சாய்பல்லவியும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். உண்மை சம்பவத்தை தழுவி படத்தை அற்புதமாக செதுக்கிய ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டுகள். ஜி.வி.பிரகாஷின் இசை ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றியுள்ளது. என தெரிவித்துள்ளார்

Read Entire Article