அப்பாவிகளை தாக்கும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

5 hours ago 2

புதுடெல்லி ,

பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய குடியிருப்பு பகுதிகளில் தாக்குதலை நடத்தியது. இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காஷ்மீரில் பொதுமக்கள் 16 பேர் பலியானார்கள். பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

பாகிஸ்தான் ராணுவம் அப்பாவிகளை தாக்கி வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ நிலைகளை மட்டுமே இந்தியா தாக்கி வருகிறது; பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தகுந்த பதிலடி தரும். இந்தியா வரம்பை மீறாது. நிதானமான, பொறுமையான அணுகுமுறைகளை இந்தியா கையாள்கிறது. என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article