மும்பை,
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு கடந்த 2002-ல் வெளியான தேவதாஸ் மிகப்பெரிய பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
சமீபத்தில், ஷாருக்கான் ஒரு நிகச்சியில் பேசுகையில், 'படப்பிடிப்பு தளத்திலேயே நான் உயிரிழக்க வேண்டும். அதுதான் என் வாழ்நாள் கனவு' என்று கூறியிருந்தார். இருப்பினும், மனைவி கவுரியின் மீது அன்பு இதற்கெல்லாம் ஒரு படி மேலே என்றே சொல்லலாம்.
அதன்படி, பழைய நேர்காணல் ஒன்றில் ஷாருக்கான், சினிமாவா, கவுரியா என்று வந்தால், நடிப்பை விட்டு விலகுவேன் என்று கூறியிருந்தார்.