அபுதாபி இந்து கோவிலில் ராம நவமி விழா.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

1 week ago 7

அபுதாபி,

அபுதாபியில் பி.ஏ.பி.எஸ். அமைப்பு நிர்வகித்து வரும் இந்து கோவிலில் இன்று ராம நவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் நடந்த சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விஷ்ணுவின் 7-வது அவதாரமாக கருதப்படும் ராமரின் பிறந்த நாளை கொண்டாடும் பண்டிகை ராம நவமி எனப்படுகிறது. சந்திர ஆண்டின் சித்திரை மாதத்தில் வளர்பிறையில் 9-வது நாளில் இந்த நவமி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசு ஊழியர்களுக்கு ராம நவமி அன்று விருப்பு விடுமுறையாக வழங்கப்படுகிறது. ராம நவமி அன்றைய தினத்தில் ராம கதைகளை வாசிப்பது வழக்கமாகும். இந்துக்கள் கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

அந்த வரிசையில் அமீரகத்தில் அபுதாபியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலில் இன்று ராம நவமி விழா சிறப்பாக நடந்து வருகிறது. காலை 9 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரை பக்தி ராம் பஜனை நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து ராமர், சீதை சிலைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆரத்தி மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்காக நேற்று காலை முதல் இந்து கோவில் வளாகத்தில் கூட்டம் அலை மோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவிலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதில் சிறப்பம்சமாக கண்கவர் இந்திய பாரம்பரிய நடன நிகழ்ச்சி இடம்பெற்றது. தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகளின் ஆன்மீக சங்கமத்தை பிரதிபலிக்கும் வகையில் தனித்துவத்துடன் அமைக்கப்பட்ட கோவிலின் கங்கா படித்துறையில் கலாசார விளக்க காட்சிகள் இடம்பெற்றன.

Read Entire Article