
சென்னை,
வருடத்தின் 365 நாட்களும் ஏதோ ஒரு முக்கிய நாளை நாம் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றோம், அல்லது நினைவு கூறுகிறோம். அதன்படி, சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னையர் தினம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "மண்ணுலகின் உயிர்களை எல்லாம் தன்னிலிருந்து ஈன்றெடுத்து, அன்பினால் அரவணைத்து, தாய்மொழியூட்டி, அறிவூட்டி, ஆளாக்கி, அவனியின் ஆதார சுருதியாய்த் திகழும் அன்னையர் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.