புதுச்சேரி: புதுச்சேரிக்கு நேற்று வந்த ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரியை சேர்ந்த தவில் கலைஞர் தட்சணாமூர்த்தி இசை பிரிவில் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளதற்காக அவரது வீட்டுக்கு சென்று கவுரவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2014க்கு முன்பாக ரயில்வேக்கு ₹800 கோடிதான் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதன்பிறகு ₹6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறோம். புது ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்குகிறோம். ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்கும் வகையில் நிதி ஒதுக்கியுள்ளோம். மக்களுக்கு உபயோகமான பட்ஜெட் இது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அனைத்து மாநிலத்துக்கும் சமமான வகையில் நிதி: ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.