அனைத்து மாநிலங்களின் ஒப்புதலின் படி தான் ஜிஎஸ்டி உள்ளது: நிர்மலா சீதாராமன்

11 hours ago 4


சென்னை: அனைத்து மாநிலங்களின் ஒப்புதலின் படி தான் ஜிஎஸ்டி உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி தொடர்பான ஒவ்வொரு தீர்மானமும் அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் தான் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாநில நிதி அமைச்சர்கள் ஜிஎஸ்டி கவுன்சிலில் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அனைவருடைய கருத்துக்கள் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி வரி தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்படுவது இல்லை. ஜிஎஸ்டி வரி – மோடி தனியாக மக்களுக்கு வரி விதிப்பது போல் பேசப்படுகிறது. ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு. முன்பு இருந்த வரியே தற்போது ஜிஎஸ்டி-யிலும் உள்ளது என்றும் கூறினார்.

The post அனைத்து மாநிலங்களின் ஒப்புதலின் படி தான் ஜிஎஸ்டி உள்ளது: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Read Entire Article