அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க கொடி கம்பம்.. அகற்றச் சென்ற காவல்துறையினருடன் தொண்டர்கள் வாக்குவாதம்

3 months ago 11
சென்னை தண்டையார்பேட்டையில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் கட்சி பெயர் பலகை மற்றும் கொடி கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினருக்கும், கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி வழங்கி உள்ளதாகவும் பெயர் பலகை, கொடி கம்பம் நடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வருமாறு போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.   இதேபோன்று சென்னை சேத்துப்பட்டு பூபதி நகர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்ற முயன்ற போது காவல்துறையினர் மாநகராட்சி அனுமதி இன்றி கொடியேற்றக்கூடாது என தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.
Read Entire Article