திருவள்ளூர், பிப்.24: திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி காய்கறி விதை மற்றும் தென்னங் கன்றுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குனர் ரவி தெரித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் தென்னை, காய்கறி விதை மற்றும் கன்றுகள், பழ கன்றுகள் ஆகியவற்றை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டும்.
உரிய அனுமதியின்றி அவற்றினை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு உரிமம் இன்றி விதை மற்றும் கன்றுகளை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நர்சரி உரிமையாளர்கள் உரிமம் இல்லாமலும், கொள்முதல் பதிவுகளை இருப்பு பதிவேட்டில் பதியாமலும் மற்றும் விற்பனை ரசீது வழங்காவிட்டாலும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். புதிய உரிமம் பெற, seedcertification.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என இவ்வாறு துணை இயக்குனர் கூறியுள்ளார்.
The post அனுமதியின்றி தென்னங்கன்று விற்றால் கடும் நடவடிக்கை: துணை இயக்குனர் எச்சரிக்கை appeared first on Dinakaran.