அந்தியூரில் மண் பாண்ட உற்பத்திக்கு நவீன சுடுமண் சூளை

3 weeks ago 6

 

அந்தியூர், ஜன.11: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் மண்பாண்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சார்பில் புதிய நவீன சுடுமண் சூளை திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த அதிநவீனமாக்கப்பட்ட புதிய சுடுமண் சூளை புகை போக்கி உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சூளையில் மண்பாண்டகளான மண் சட்டிகள், பானைகள், அடுப்புகள், உண்டியல்கள், கால்நடைகளின் உருவ பொம்மைகள், குழந்தைகள் விளையாடும் செப்பு சாமான்கள் மற்றும் பல மண்பாண்ட பொருட்களை தயார் செய்யலாம்.

பொங்கலையொட்டி கால்நடைகளின் உருவ பொம்மைகளுக்கு வர்ணம் பூசப்பட்டு விற்பனைக்காக தயார் செய்யப்படுகிறது. மேலும், பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மண்பாண்ட தொழிலாளர்கள் இரவு, பகல் பாராமல் மண் பாண்டங்கள் தயாரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், மாவட்டத்தில் முதல் முறையாக துவங்கப்பட்ட இந்த நவீன மயமாக்கப்பட்ட புதிய சுடுமண் சூளை மண்பாண்ட தொழிலுக்கு மிகவும் பயனாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The post அந்தியூரில் மண் பாண்ட உற்பத்திக்கு நவீன சுடுமண் சூளை appeared first on Dinakaran.

Read Entire Article